இந்தியா

சரிந்தது! புதுச்சேரியில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை...உயிர் பலியும் குறைந்ததால் மக்கள் நிம்மதி

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020
Advertisement
சரிந்தது!  புதுச்சேரியில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை...உயிர் பலியும் குறைந்ததால் மக்கள் நிம்மதி

புதுச்சேரியில் மக்கள் தொகையுடன் போட்டி போடும் அளவுக்கு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, டூ வீலர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
வாகனங்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல, சாலைகளில் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. நகரத்தில் உள்ள சாலைகள் அதிகபட்சமாக அகலப்படுத்தப்பட்டு விட்டன. இதற்கு மேலும் அகலப்படுத்துவதற்கு இடமில்லை. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு புறவழிச் சாலைகள் எதுவும் புதிதாக அமைக்கப்படவில்லை. அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த காமராஜர் சாலையையும், மறைமலை அடிகள் சாலையையும் இணைக்கும் வகையில் உப்பனாறு வாய்க்கால் மீது கட்டப்படும் பாலம் முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கிறது. நகரத்தில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வசதியாக ஒரு இடத்தில் கூட 'சப் வே' என அழைக்கப்படும் சுரங்கப்பாதைகள் கூட கிடையாது.
இதுபோன்ற காரணங்களாலும், போக்குவரத்து விதிமீறல்களாலும் புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்தவாறே இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த ஆண்டில், விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதுபோல, விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 95ஆக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிர் பலியும் முதன்முறையாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X