பல்கலை அறையில் 16 மணி நேரம் சிறை பிடிக்கப்பட்ட துணை வேந்தர்

Added : பிப் 05, 2020
Advertisement

கோல்கட்டா : மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், பிரசிடென்சி பல்கலை மாணவர்கள், தங்கள் விடுதியை விரைவாக சீரமைக்க வேண்டும் என, போராட்டம் நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பல்கலை துணை வேந்தரை, அவரது அலுவலக அறைக்குள், 16 மணி நேரம் சிறை பிடித்தனர்.


முற்றுகை போராட்டம்


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் கோல்கட்டாவில், பிரசிடென்சி பல்கலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பல்கலை துணைவேந்தர் அனுராதா லோகியாவை, அவரது அலுவலக அறைக்குள், ௧௬ மணி நேரம் மாணவர்கள் சிறை பிடித்தனர்.

துணைவேந்தர் அலுவலகம் முன், நேற்று முன்தினம், 2:௦௦ மணிக்கு துவங்கிய மாணவர்களின் முற்றுகை போராட்டம், நேற்று காலை வரை நீடித்தது. இதனால், துணை வேந்தர் அனுராதா லோகியா, நேற்று காலை 6:௦௦ மணிக்கு மாற்று வழி மூலம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த போராட்டம் குறித்து, மாணவர் பிரதிநிதி சுபோ பிஸ்வாஸ் கூறியதாவது: பல்கலை கட்டடத்தின் அருகில், மாணவர்களுக்கான விடுதி உள்ளது. 130 ஆண்டுகள் பழமையான அந்த விடுதியில், ஐந்து பிளாக்குகள் உள்ளன. அதில் இரண்டு பிளாக்குகளை சீரமைக்கும் பணி, மூன்று ஆண்டுகளாக நடந்தது. மீதி மூன்று பிளாக்குகளை சீரமைக்கும் பணி, ஓராண்டாக நடப்பதால், அதை வேகமாக முடிக்க வேண்டும் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்ட, விடுதி ஊழியர்கள் எட்டு பேரை, மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் கோரி போராடி வருகிறோம். விடுதி சீரமைப்பு பணிகளால், ஒரு சிறிய அறையில், 3௦ மாணவியர் தங்குகின்றனர்.


நடவடிக்கை


நிர்வாகம், சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தாமல், போராடும் மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கிறது. துணைவேந்தர் மீண்டும் பல்கலை வளாகத்திற்குள் வந்தால், எங்களுக்கு பதில் அளிக்காமல் திரும்பிச் செல்ல முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X