பொது செய்தி

இந்தியா

வங்கி மோசடிகள் குறைந்தன; ராஜ்யசபாவில் அமைச்சர் தகவல்

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 வங்கி மோசடிகள் குறைந்தன; ராஜ்யசபாவில் அமைச்சர் தகவல்

புதுடில்லி : 'வங்கி மோசடிகள், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 0.04 சதவீதமாக குறைந்துள்ளன' என, நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இது குறித்து, ராஜ்யசபாவின் கேள்வி நேரத்தின் போது, பதில் அளித்த அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: பொதுத்துறை வங்கி மோசடிகள், கடந்த 2016 - 17ல், 38 ஆயிரம் கோடியாக இருந்தது. இது, 2017 - 18ல், 16 ஆயிரம் கோடியாக குறைந்தது. வங்கி மோசடிகள் குறித்து புகார் மற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், இந்த தொகை, ஐந்தாயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடி கள், 2009 - 14 காலகட்டத்தில் 0.58 சதவீதமாக இருந்தன. அது, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 0.04 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-பிப்-202016:05:09 IST Report Abuse
Loganathan Kuttuva நல்ல முன்னேற்றம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X