பொது செய்தி

இந்தியா

வருகிறது 'ஜி.எஸ்.டி., லாட்டரி'; பொருளுக்கு 'பில்' வாங்கினால் பரிசு

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (11)
Advertisement
GST,GST_lottery,Government,CBIC,ஜிஎஸ்டி,ஜிஎஸ்டி_லாட்டரி

புதுடில்லி: கடையில் பொருட்கள் வாங்கும் போது, 'பில்' எனப்படும் ரசீது கேட்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, 'ஜி.எஸ்.டி., லாட்டரி' திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது: அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், ரசீது கேட்டு வாங்க வேண்டும். இதை ஊக்குவிக்க, புதிய 'ஜி.எஸ்.டி., லாட்டரி' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நுகர்வோர், பொருட்கள் வாங்கும் போதும் சேவைகளை பெறும்போதும், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரை வரி செலுத்துகின்றனர். இந்த வரி செலுத்தப்பட்ட ரசீதை ஒருவர், மத்திய அரசு அறிவிக்க உள்ள, லாட்டரி சீட்டு வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். அவற்றின்படி, குலுக்கல் முறையில், வெற்றி பெற்றோர் தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு, 10 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மின்னணு முறையில், குலுக்கல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று, பரிசுகள் வழங்கப்படும். ரசீதின் குறைந்தபட்ச மதிப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானிக்கும்.





தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலனை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது, மிகை லாப தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.இந்த அபராத தொகை, நுகர்வோர் நல நிதியத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. இத்தொகையில் ஒரு பங்கு, லாட்டரியில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்க ஒதுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பல நிறுவனங்கள், குறிப்பாக உணவகங்கள், ஜி.எஸ்.டி., என்ற பெயரில், நுகர்வோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்கின்றன.இது போன்ற மோசடிகளை தடுக்கவும், நுகர்வோரிடம் ரசீது கேட்கும் பழக்கதை ஊக்குவிக்கவும், புதிய லாட்டரி திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், போலி ஜி.எஸ்.டி., எண் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதும் தடுக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-பிப்-202017:01:12 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் கோவையில் பிரபலமான உணவகம் ஒன்று தனது வாடிக்கையாளர்களுக்கு பில் கொடுத்து பணத்தோடு பில்லையும் திரும்ப எடுத்துக்கொள்வார்கள். பில் உங்களுக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டால் மட்டும் திரும்பக்கொடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-பிப்-202015:54:07 IST Report Abuse
Loganathan Kuttuva பெரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வரி ஏய்ப்பு செய்வது கடினம் மேலும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
05-பிப்-202013:39:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நல்ல திட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X