கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளில் உயிர்பலி தடுக்க நடவடிக்கை; அறிக்கை அளிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு

Added : பிப் 05, 2020
Advertisement
 நீர் நிலைகளில் உயிர்பலி தடுக்க நடவடிக்கை; அறிக்கை அளிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு

சென்னை : நீர் நிலைகளில் விழுந்து, உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோடீஸ்வரி தாக்கல் செய்த மனுவில், 'ஏரிகள், குளங்கள், அருவிகள் மற்றும் கோவில் தெப்பக்குளங்களில் மூழ்கி, பலர் இறக்கின்றனர். இதை தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு மற்றும் அறநிலையத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:கோவில் குளங்களின் நுழைவு வாயில்களை பூட்டி வைக்கவும், குளங்களை சுற்றி தடுப்பு வேலி அமைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. குளங்கள் அருகே யாரும் செல்வதை தடுக்க, ஊழியர்கள் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். தெப்ப திருவிழாவின் போது, தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் இருக்க வேண்டும் என, உத்தரவிடப் பட்டுள்ளது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோவில்களில், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, அறநிலையத்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் நிலைகளில், உயிர் பலி நேராமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X