பொது செய்தி

தமிழ்நாடு

60 சதவீதம் பேர் பெயில்: இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
 60 சதவீதம் பேர் பெயில்: இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி

சென்னை: அண்ணா பல்கலை நடத்திய செமஸ்டர் தேர்வில், 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. பயிற்சி அளிக்கப்படாத பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரித்ததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 150க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், தன்னாட்சியுடன் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பாட திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்ற பணிகளை, அந்த கல்லுாரி நிர்வாகங்களே மேற்கொள்கின்றன.த

ன்னாட்சி அல்லாத கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை தேர்வுத்துறை சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.இந்நிலையில், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை சமீபத்தில் வெளியிட்டது. இதில், 40 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.குறிப்பாக, 'கம்ப்யூட்டர் கோடிங்' தொடர்பான, 'பைத்தான்' மற்றும் கணித பாடங்களில், பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது.

இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறியதாவது:தன்னாட்சி பெறாத கல்லுாரிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில், அண்ணா பல்கலையின் வினாத்தாள், மிகவும் கடினமாக தயாரிக்கப் பட்டுள்ளது. சரியாக பயிற்சி அளிக்கப்படாத பாடங்களில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெறுகின்றன. அதனால், தேர்வில் மதிப்பெண் குறைந்து, 'அரியர்' எண்ணிக்கை அதிகரிக்கிறது.தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகளில், மிகவும் எளிமையான வினாத்தாள் வழங்கப்பட்டு, அந்த கல்லுாரிகளின் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுகின்றனர்.

அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளுக்கும், அந்த கல்லுாரி பேராசிரியர்களே தேர்வு நடத்தி, விடைத்தாளை திருத்தி, மதிப்பெண் வழங்குகின்றனர்.இந்த பாரபட்சமான நடவடிக்கையால், இணைப்பு அந்தஸ்து பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.அண்ணா பல்கலையின் இந்த நடவடிக்கை, அனைத்து கல்லுாரிகளையும் தன்னாட்சி அந்தஸ்துக்கு செல்ல வேண்டும் அல்லது மாணவர்கள் தன்னாட்சி கல்லுாரிகளில் சேர வேண்டும் என்ற, மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
11-பிப்-202020:41:01 IST Report Abuse
bal எல்லோரும் விஜய் மற்றும் ரஜினி படம் பார்க்க போனார்கள்...இல்லையேல் CAA எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றனர்...நேரம் வீணானது...பிடிக்கமுடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
10-பிப்-202017:23:18 IST Report Abuse
konanki தேர்வே கூடாது. எதுக்கு தேர்வு ? கல்லாரி பீஸ் கட்டின உடனே டிகிரி certificate கொடுங்க . டிகிரி certificate பார்த்து அரசாங்க வேலை கொடுக்கணும். எவ்வளவு சிம்பிளான விஷயம்
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
09-பிப்-202021:28:23 IST Report Abuse
Gnanasekaran Vedachalam பொறியியல் கல்வி விளங்கிட வேண்டுமானால் தேர்வு பயற்சி மிக முக்கியம் மாணவர் தேர்வு யாக விட்டால் அடுத்த பருவத்தில் சரியான பயற்சி கொடுத்து தேர்வு பெற வைக்க வேண்டும் அப்போது தான் கல்வியில் முதலீடு வரும்படி வீதம் பயன்பாடு உள்ளதாய் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X