பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் நகராட்சியில் சாலை பணி துவக்கம்

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (1)
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில், 12 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் போடுவதற்கு, கடந்த ஆண்டு உத்தரவு வழங்கப்பட்டது.அந்த பணிகள், தற்போது, ஆறு பிரிவுகளில், 12 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகின்றன.

இதில், 45வது வார்டு, காமாட்சி அம்மன் அவென்யூ, சதாவரம் காந்தி சாலை, 46வது வார்டில், ஓரிக்கை பல்லவன் நகர், சின்ன அய்யன்குளம், கஸ்துாரிபாய் நகர், ஆசிரியர் நகர், ரத்தினம் நகர் போன்ற பகுதிகளில், ஒரு பிரிவாக பணி நடந்து வருகிறது.

அதே போல், 47வது வார்டு, குணசேகர் நகர், தமிழ்செல்வி நகர், 41வது வார்டு, நத்தப்பேட்டை, 42வது வார்டு, தேனம்பாக்கம், 30வது வார்டு, சேலை ராமசாமி தெரு, 27வது வார்டு, திருக்காலிமேடு உட்பட, 51வது வார்டுகளில், பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-பிப்-202005:52:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni மாடர்ன் யுவதிகள் ரவிக்கைன்னுஒன்னுபோட்டுண்டு நிக்குதுங்களே அதுபோல குண்டும்குழியுமா இட்டுநிரப்புவானுக மக்களை ஏமாற்றும் உழைப்பாளிகள் சீ அசிங்கமாயிருக்கு ,தெருவிலே நடந்தால் தடுக்கிவில்னும் வண்டிலேபோனால் கவுந்துவிழணும் அதிருஷ்டம் இருந்தால் உசுரோட வீடுவரலாம் இல்லேன்னா மேல் உலகம் போயிடனும் இன்று ரோடு போடுவானுக நாளைக்கி கேபிள்காரன்வந்து நொந்திட்டுபோடுவான் மூடவேமாட்டானுக பல்லுப்போன ஒட்டகம்போல ரோடுக காணப்படும் நம்மஊர்க்காரனுகளேதான் சிங்கப்பூர் போல்பல நாடுகளிலேயும் ரோடு சேரி செய்து ண்டுருக்கானுக அங்கே ராவோடுறாவா ரோடுகள் சரி செய்யப்பட்டதும் மக்கள் பயணிக்கவசதியாக இருக்கும் நம்ம ஊர்லே எதனால் மக்களில் கொலை செய்ரதுகள் , வீட்டுலேதிருமணம் என்று வாசல்லே பந்தல்போட்டா அந்தக்குழியைமூடுவது கிடையாது ஒருமுறை காலை வாக்கிங்போறச்ச குழி தெரியாமல் கீழே விழுந்து அடிபட்டதுலே இன்னிவரை எனக்கு நடக்கமுடியாமல் ஆச்சு எங்கே சொல்லி அலறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X