செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி| Dinamalar

செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

Added : பிப் 05, 2020 | |
சென்னை: 'விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கடந்த, ௨௦௧௧ - ௧௫ம் ஆண்டில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக் பணிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த
 செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த, ௨௦௧௧ - ௧௫ம் ஆண்டில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக் பணிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், செந்தில் பாலாஜி மீதும் குற்றம் சாட்டப்பட்டது.இவ்வழக்கில் மேல் விசாரணை நடத்திய போலீசார், செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி ஆதிகேசவலு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாதாடியதாவது: இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், ஒரு இடத்திலும், செந்தில் பாலாஜியின் பெயர் இல்லை. குற்றப் பத்திரிகையை எதிர்த்து, அப்போது மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மேல் விசாரணை என்ற பெயரில், சோதனை நடத்தி உள்ளனர்.குற்றவியல் நடைமுறை சட்டப்படி, விசாரணைக்கு ஆஜராக, நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.மனுதாரர், தலைமறைவாக இல்லை; அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.இவ்வாறு, அவர் வாதாடினார்.போலீஸ் தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதாடியதாவது:மனுதாரர் தலைமறைவாக உள்ளார். ௨௦௦க்கும் மேற்பட்டோரிடம், தலா, இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது. மேல் விசாரணைக்கு அனுமதி பெறப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.மோசடியில், முக்கிய நபராக மனுதாரர் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறேன். சோதனைக்கு சென்ற போது, அதிகாரிகளை பணியாற்ற விடாமல் தடுத்துள்ளனர்; அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் வாதாடினார்.இதையடுத்து, குற்றவியல் நடைமுறை சட்டப்படி, விசாரணைக்கு ஆஜராக, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றார். மேலும், அவர் தலைமறைவாக இருப்பதால், வழங்க முடியவில்லை என்றார்.அதைத் தொடர்ந்து, 'முதலில், நோட்டீஸ் தயார் செய்யுங்கள்; விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்கலாம். அன்று, விசாரணை அதிகாரி முன், மனுதாரர் ஆஜராகட்டும்' எனக்கூறிய நீதிபதி, விசாரணையை, வரும், ௭ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, மனுதாரரை துன்புறுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X