பொது செய்தி

தமிழ்நாடு

சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் குறைதீர் முகாமில் வெங்கடாபுரம் மக்கள் மனு

Added : பிப் 05, 2020
Advertisement
 சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்  குறைதீர் முகாமில் வெங்கடாபுரம் மக்கள் மனு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், நடந்தது.

அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.இதில், வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பசுமைவீடு, திருமண உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 325 மனுக்கள் வரபெற்றன.இந்த மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில், சாலை விபத்தில் இறந்த, 11 பேரின் வாரிசுகளுக்கு, முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத்தொகை, 9.80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.மேலும், விதவை சான்று மற்றும் கீழவலம் கிராமத்தில், 19 பேருக்கு, வீட்டுமனை பட்டாக்களையும், கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து, கூட்டத்திற்கு வந்தோர் அளித்த மனுக்கள் விபரம்:இ.தெய்வானை தருமன், முன்னாள் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள்:வெங்கடாபுரம் கிராமத்திற்கு சொந்தமான சுடுகாடு, தெள்ளிமேடு அருகில் உள்ளது. இப்பகுதியில், 40 சென்ட் இடத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, ஓட்டு வீடு மற்றும் தோட்டம் அமைத்துள்ளார்.

இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த ஆண்டு, ஜூன் மாதம், ஆக்கிரமிப்பை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை; ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

கே.பி.பாலகிருஷ்ணன், குண்ணவாக்கம்: குண்ணவாக்கம் கிராமத்தில், மழை நீர் கால்வாய்கள், கான்கிரீட் சாலை ஆகிய பணிகளுக்காக, 2019ம் ஆண்டு, 74.85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் செய்ய, கலெக்டர் உத்தரவிட்டும், செயல்படுத்தப்படவில்லை. மேற்கண்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்.

எஸ்.யுவராஜ், மாநில தலைவர்; தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்வது, அதிகரித்து வருகிறது. இதனால், சாலைகள் சேதமடைந்து, விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அதிகபாரம் ஏற்றிச்செல்வோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நா.தெய்வாணை, தேசுமுகிப்பேட்டை: திருக்கழுக்குன்றம், தேசுமுகிப்பேட்டையில், 50க்கும் மேற்பட்டோர், 40 ஆண்டுகளாக, வாடகை வீடுகளில் வசிக்கிறோம். கூலி வேலை செய்து, குடும்பம் நடத்துகிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

மு.செல்வி, இருளர் பகுதி, பட்டிபுலம்: பட்டிபுலம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த, 25 பேர், குடிசை வீட்டில், 30 ஆண்டுகளாக வசிக்கிறோம்.வீட்டு மனை மற்றும் வீடு கட்டித்தர கோரி, தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை. பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X