குண்ணம் பள்ளி முன்புறம் நெடுஞ்சாலை, பின்புறம் ஏரி மதில் சுவர் இல்லாததால் பெற்றோர், 'திக்...திக்...'

Added : பிப் 05, 2020
Advertisement
 குண்ணம் பள்ளி முன்புறம் நெடுஞ்சாலை, பின்புறம் ஏரி மதில் சுவர் இல்லாததால் பெற்றோர், 'திக்...திக்...'

குண்ணம்:குண்ணம் அரசு பள்ளிக்கு, மதில் சுவர் இல்லாததால், மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் அச்சமடைகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்ணம் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர்கள் நலன்இங்கு, குண்ணம், அயிமஞ்சேரி, சிறுமாங்காடு, கோவலவேடு, திருமாங்கரணை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் முன்புறம், வாலாஜாபாத் -- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை உள்ளது. பின்புறம், குண்ணம் ஏரி உள்ளது. பள்ளிக்கு மதில் சுவர் இல்லாததால், மாணவர்கள் இடைவெளி நேரத்தில் ஏரி மற்றும் நெடுஞ்சாலைக்கு செல்கின்றனர். இதனால், மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர் அச்சம் அடைகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:பள்ளியின் முன்புறம் நெடுஞ்சாலையும், பின்புறம் ஏரியும் உள்ளது. குறும்புக்கார மாணவர்கள், பள்ளியின் இடைவெளி நேரத்தில், பள்ளியின் முன்புறம் மற்றும் பின்புறம் விளையாடி மகிழ்கின்றனர்.நடவடிக்கை இல்லைஇதனால், மாணவர்களுக்கு ஆபத்து உள்ளது.

இந்த பள்ளிக்கு, மதில் சுவர் கட்டி தர வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டர், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதங்கள் நிகழும் முன், இந்த பள்ளிக்கு மதில் சுவர் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X