சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரி உபரி நீர் கால்வாய் அருகே இரவில் மணல் திருட்டு

Added : பிப் 05, 2020
Advertisement
 ஏரி உபரி நீர் கால்வாய் அருகே இரவில் மணல் திருட்டு

கும்மிடிப்பூண்டி:ஏரி உபரி நீர் கால்வாய் அருகே, இரவு நேரத்தில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என, எளாவூர் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் கிராமத்தில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மகாலிங்கம் நகர் சுடுகாடு உள்ளது.அந்த சுடுகாட்டின் பின்புறம், ஏழு கண் பாலத்திற்கு செல்லும், ஏரி உபரி நீர் கால்வாய் அருகே, அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

பரந்து விரிந்து காணப்படும் அந்த இடத்தில், பல பள்ளங்களும் அதன் அருகே மணல் குவியல்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.இரவு நேரத்தில், சிலர் டிராக்டர் வைத்து மணல் திருடி வருவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மணல் திருட்டை போலீசாரும், வருவாய் துறையினரும் தடுக்க வேண்டும்.மணல் திருட்டில் ஈடுபடு வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எளாவூர் கிராம மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X