தமிழ்நாடு

ரோட்டோர கடைகளை முறைப்படுத்த திட்டம் ரூ. 5.41 கோடியில் செயல்படுத்தப்படுகிறது

Added : பிப் 05, 2020
Advertisement

மதுரை, மதுரை நகரில் ரோட்டோர கடைகளை முறைப்படுத்த ரூ.5.41 கோடியில் திட்டத்தை மாநகராட்சி துவங்கவுள்ளது.
நகரில் கண்ட இடங்களில் ரோடுகளை ஆக்கிரமித்து தரை, தள்ளுவண்டி கடைகள் வைத்துள்ளனர். இதை முறைப்படுத்த 'space saving s treet furniture' என்ற திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து மாநகராட்சியே கடைகளை அமைக்கிறது.
முதற்கட்டமாக டவுன்ஹால் ரோடு, கீழச்சித்திரை வீதி, தாளவாய் அக்ரஹாரத்தெரு, டி.பி.கே., ரோடு தேர்வாகியுள்ளன. இங்குள்ள கடைகள் முறைப்படுத்தப்படும். இந்த இடங்களில் பழங்கள், காய்கறிகள், பூஜை பொருட்கள், காலணிகள், இதர பொருட்கள் விற்க ஒரு இடம், பாஸ்ட்புட் கடைக்கு தனியிடம், பூக்கள் விற்க இன்னொரு இடம் என மூன்று பகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.
314 பாஸ்புட் கடை, 305 பூக்கடை, 1061 இதர கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5.41 கோடி செலவாகும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். விரைவில் நிதி ஒதுக்கப்படும். திட்டத்தால் நெரிசல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வான இடங்களில் அமைய உள்ள கடைகள் விவரம்
தேர்வான இடம் பாஸ்ட்புட் பூக்கடை மற்ற
கடைகள்
டவுன்ஹால்ரோடு 51 105 281
கிழக்கு சித்திரை வீதி 85 63 242
தளவாய் தெரு 74 62 218
டி.பி.கே.,ரோடு 104 75 320
மொத்தம் 314 305 1061

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X