பொது செய்தி

இந்தியா

சிறந்த குழந்தை விருது பெற்ற மாணவருக்கு கவர்னர் பாராட்டு

Added : பிப் 05, 2020
Advertisement
 சிறந்த குழந்தை விருது பெற்ற  மாணவருக்கு கவர்னர் பாராட்டு

புதுச்சேரி:சிறந்த குழந்தைகளுக் கான தேசிய விருது பெற்ற வெங்கட சுப்ரமணியனை, கவர்னர் கிரண்பேடி நேரில் அழைத்து பாராட்டினார்.
நெல்லித்தோப்பை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் வெங்கட சுப்ரமணியன், ஜிப்மரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாற்று திறனாளியான இவர், படிப்பு, இசை, கராத்தே, சமூகப்பணி, விளையாட்டு, யோகா, சாரணியர் இயக்கப்பணி, பிறமொழி கற்றல், நீச்சல் உள்ளிட்ட பலதுறைகளில் சிறந்து விளங்குகிறார். மேலும், அபாகஸ் பயிற்சியில் 10 அலகுகளை முடித்து, சர்வதேச அளவிலான அபாகஸில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவரது தன்னம்பிகை மற்றும் அயராத முயற்சியை பாராட்டி, வெங்கட சுப்ரமணியனுக்கு சிறந்த குழந்தைக்கான தேசிய விருதை கடந்த 22ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.தேசிய விருது பெற்ற வெங்கட சுப்ரமணியனை, கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாஸ் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X