பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி அரசு பள்ளியில் 'கொரோனா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு

Added : பிப் 05, 2020
Advertisement
 திருத்தணி அரசு பள்ளியில் 'கொரோனா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு

திருத்தணி:திருத்தணி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 'கொரோனா' வைரஸ் காய்ச்சல் பரவும் விதம் பற்றி, மாணவியருக்கு அரசு மருத்துவர் கங்கா விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.

திருத்தணி, அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், திருத்தணி, அரசு மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். இதில், அரசு மகப்பேறு மருத்துவர் கங்கா பங்கேற்று, கொரோனா வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, அதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து, மாணவியர் இடையே விளக்கி கூறினார்.

மேலும், இந்த வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் தீமைகள் குறித்தும், காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் குறித்தும், மருத்துவர் கங்கா விளக்கி பேசினார்.அதைத் தொடர்ந்து, 'கொரோனா' வைரஸ் காய்ச்சல் தடுப்பது குறித்து துண்டு பிரசுரம் மாணவியருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X