சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 ஆயிரம் லிட்டர் எரிசாரயம் எரிப்பு

Added : பிப் 05, 2020
Advertisement
 15 ஆயிரம் லிட்டர் எரிசாரயம் எரிப்பு

கும்மிடிப்பூண்டி:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு கடத்தியபோது பிடிபட்ட, 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம், நேற்று, பள்ளத்தில் ஊற்றி தீயிட்டு அழிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 24ம் தேதி, புலனாய்வு பிரிவு போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு, லாரி மூலம், 500 கேன்களில் கடத்தப்பட்ட, 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. அதை பறிமுதல் செய்து, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.

கலால் ஆணையர் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., கல்பனா தத் ஆகியோர் முன்னிலையில், நேற்று, பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.எளாவூர் ஏழு கண் பாலம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு லாரிகள் மூலம் எரிசாராயம் கொண்டு செல்லப்படட்டது.அங்குள்ள இரு பள்ளங்களில், எரிசாராயத்தை ஊற்றினர். அதன்பின், தீயிட்டு எரித்து அழித்தனர். தீ அடங்கும் வரை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X