பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வளர்ச்சிக்கு சேவை செய்யுங்க...! மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை

Added : பிப் 05, 2020
Advertisement

சென்னை:''நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், கிராம வளர்ச்சிக்கு சேவையாற்ற முன் வர வேண்டும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், நேற்று கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். அப்போது, அவர்களிடம் கவர்னர் கூறியதாவது:இந்தியாவில், 391 பல்கலைகள், 16 ஆயிரத்து, 278 கல்லுாரிகள் மற்றும், 12 ஆயிரத்து, 483 மேல்நிலைப் பள்ளிகளில், 40 லட்சம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும், 53 பல்கலைகள், 1,334 கல்லுாரிகள் மற்றும், 1,953 மேல்நிலைப் பள்ளிகளில், 4.38 லட்சம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்ளனர்.இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனால், இந்திய அளவில் ஒப்பிடும் போது, தமிழகத்தில் அதிகம் உள்ளனர்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின், என்.எஸ்.எஸ்., மற்றும், என்.சி.சி., மாணவர்கள், காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளனர். அதேபோல, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவரும், கிராமங்களின் வளர்ச்சிக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X