பொது செய்தி

தமிழ்நாடு

90 லட்சம் பேரை காவு வாங்கும் புற்றுநோய்

Added : பிப் 05, 2020
Advertisement

மதுரை ''உலகில் ஆண்டிற்கு 90 லட்சம் பேர் புற்று நோயால் இறக்கின்றனர்,'' என, மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்தியாவில் 20.5 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ள னர். 200 வகை புற்றுநோய் இருந்தாலும், ஆண்களுக்கு தலை, கழுத்து, இரைப்பையிலும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை வாயிலும் தான் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. உலகில் ஆண்டிற்கு 90 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். உடற்பயிற்சி, பதப்படுத்தப்படாத உணவு, பழம், காய்கறிகள் இப்பாதிப்பிற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கின்றன, என்றார்.இயக்குனர் ரமேஷ் அர்த்தனாரி, 'உயிரிழப்பிற்கான முக்கிய காரணங்களில் 2வது இடத்தில் இருப்பது புற்றுநோய். இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புக்கு 8 சதவீதம் இந்நோய் காரணம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X