பொது செய்தி

இந்தியா

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்: சீனியர் எஸ்.பி. ராகுல்அல்வால் அறிவுரை

Added : பிப் 05, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் குறைந்த துாரம் சென்றால் கூட ஹெல்மெட் காட்டாயம் அணிய வேண்டும் என சீனியர் எஸ்.பி. ராகுல்அல்வால் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;இளைஞர் சக்தி மூலம் மாற்றத்தை கொண்டு வருதல் என்ற தலைப்பில், 31வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹெல்மேட் அணிந்து இருசக்கர வாகன பேரணி, மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பை ஒரு சமூக இயக்கமாக மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒரு வாரத்தில், 25 பள்ளிகள், 3 மருத்துவ கல்லுாரிகள், 2 பொறியியல் கல்லுாரி, 1 தொழிற்சாலை, 1 பல்கலைக்கழகத்தில், 40 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதில், 600 பேர் பங்கேற்றனர். ஓவிய போட்டியில் 1065 பேர் பங்கேற்றனர். பள்ளிகளில் சாலை பாதுகாப்பு பற்றிய ஓவியம், வினாடிவினா, பேச்சு மற்றும் சொற்பொழிவு நடத்தப்பட்டது. 7000 மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றதுடன், 800 மாணவர்கள் சாலை பாதுகாப்பு பேரணியில் பங்கேற்றனர்.போலீசார் ஹெல்மெட் அணிந்து, 5 பேரணிகள் நடத்தினர். ஹெல்மேட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு 47 கிலோ இனிப்புகள், 500 சாக்லெட், 300 பேனா பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு 8,280 துண்டு பிரசுரங்கள், 250 ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. 4 தெரு நாடகங்கள் நடத்தப்பட்டது.பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு கேட்டு கொள்கிறோம். குறைந்த துாரம் சென்றால் கூட ஹெல்மெட் காட்டாயம் அணிய வேண்டும். சில சமயங்களில் பாதுகாப்பான வாகன ஓட்டிகள் கூட பிற வாகனங்கள் மோதி விபத்திக்குளாகி உள்ளனர். நாம் ஹெல்மெட் அணிந்திருந்தால், தேவையற்ற உயிரிழப்பு மற்றும், மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.ஹெல்மெட் அணிதல் ஒரு சமூக இயக்கமாக மாற்றி புதுச்சேரி மக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல், இரண்டு நபர்களுக்கு மேல் வாகனம் ஓட்டுதல், மொபைல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் சாலை விபத்துக்கான முக்கிய காரணம். இந்த விதிமீறல்கள் எல்லாம் தவிர்க்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரின் உழைப்பால், கடந்தாண்டு உயிரிழப்பு 30 சதவீதம் மற்றும் மற்ற சாலை விபத்து வழக்குகள் 9 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விபத்துக்களை மேலும் குறைக்க புதுச்சேரி போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றி, போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X