பொது செய்தி

இந்தியா

தலைமுடி தானம்: மாணவிகளுக்கு கவர்னர் சான்றிதழ்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 தலைமுடி தானம்: மாணவிகளுக்கு கவர்னர் சான்றிதழ்

வில்லியனுார்:புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக தலைமுடி தானம் வழங்கிய அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மாணவிகளுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் 380 பேர், தங்கள் தலை முடியை தானமாக வழங்கினர். அதனை, அடையாறு புற்றுநோய் மைய நோயாளிகளின் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.நேற்று நடந்த பாராட்டு விழாவிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி இயக்குனர் மகாதேவன் முன்னிலை வகித்தார். வெங்கடேஸ்வரா கல்வி குழும முதன்மை அதிகாரி டாக்டர் வித்யா வரவேற்றார். கவர்னர் கிரண்பேடி, தலை முடி தானம் வழங்கிய மாணவிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நடிகை கவுதமி புற்றுநோய் குறித்து சிறப்புரையாற்றினார். கல்லுாரி டீன் ரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X