பொது செய்தி

தமிழ்நாடு

பாலத்துக்கு தேவை பலம்;

Added : பிப் 05, 2020
Advertisement
 பாலத்துக்கு தேவை பலம்;

பாலத்தில் வளருது மரம்திருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படாததால், பக்கவாட்டுச் சுவரில், செடிகள் முளைத்து வருகின்றன. முறையாக பராமரிக்க வேண்டும்.- சுதமதி, ஒண்டிப்புதுார்.

தொட்டியில் குடிநீர் வீண்துடியலுார் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இரும்பு குழாய்க்கு, 'வாஸர்' இல்லாததால், தண்ணீர் வீணாகிறது.- கோகுல், துடியலுார்.

சாக்கடை கால்வாய் அடைப்புதடாகம் ரோடு, இடையர்பாளையம் - வடவள்ளி செல்லும் சாலையில் உள்ள, சாக்கடை கால்வாயில், கழிவு மண் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- துரைசாமி, கோவில்மேடு.

குழாய் உடைப்பு; தண்ணீர் வீண்மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையத்தில், மேம்பாலம் கட்டுமான பணி நடக்கும் பகுதியில், குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- முத்துகுமார், கவுண்டம்பாளையம்.

கால்வாயை துார் வாரணும்சூலுார், குரும்பபாளையத்தில் உள்ள, விநாயகர் கோவில் அருகில், பராமரிப்பின்றி இருக்கும், சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும்.-தீபன்,

குரும்பபாளையம்.

பணியாளர்கள் வருவதில்லைமாநகராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு ஸ்ரீலட்சுமி நகர் பகுதியில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, ஆறு மாதங்களுக்கும் மேலாகிறது. இங்குள்ள சாக்கடை கால்வாயில், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-ராஜசேகரன், ஸ்ரீலட்சுமி நகர்.

இணைப்பு சாலை மோசம்அவினாசி ரோடு பீளமேடு, பி.ஆர்.புரம் செல்லும், இணைப்பு சாலையான சாஸ்திரி ரோடு பள்ளமாகி விட்டது.- செல்வநாராயணன், பிஆர்.புரம்.

காலி இடத்தில் குவியுது குப்பைசுந்தராபுரம், கல்லுக்குழி வீதியில் உள்ள, காலி இடத்தில் குவிக்கப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ஜெயசீலன், கல்லுக்குழி வீதி.

மேம்பாலம் அருகே ரோட்டில் குழிசிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோட்டில் உள்ள, மேம்பாலத்தின் இறக்கத்தில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரத்தில், இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள், குழிகள் இருப்பது தெரியாமல், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- ராமச்சந்திரன், வெள்ளலுார்.

ரோட்டை சீரமைக்கணும்மாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட, சத்தி ரோடு, ராமகிருஷ்ணாபுரம், நேதாஜி வீதியில் ரோடு சிதிலம் அடைந்துள்ளது; இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- ஜெகதீசன், நேதாஜி வீதி.

நாய் தொல்லைபோத்தனுார் - செட்டிபாளையம் ரோடு, ஈஸ்வர் நகர், ஸ்ரீராம் நகர் பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதால், விபத்து ஏற்படுகிறது.- ரகு, செட்டிபாளையம்.

கழிவுநீர் செல்ல வழியில்லைதுடியலுார், புது முத்து நகர் முதல் வீதியில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யாததால், மண், மர இலைகள் விழுந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது.- அம்மு, புது முத்து நகர்.

அடிப்படை வசதி இல்லைகாரமடை அருகே அண்ணா நகரில், அடிப்படை வசதிகள் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.- ராஜா, அண்ணா நகர்.

குப்பை தொட்டி அவசியம்அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, குப்பை தொட்டி இல்லாததால், சாலையில் குவிக்கப்படுகிறது.-கனகராஜ், சின்னியம்பாளையம்.

விளக்கு எரிவதில்லைதொண்டாமுத்துார் - நரசீபுரம் செல்லும் சாலையில், சில தெருவிளக்குகள் எரிவதில்லை. மின்வாரியத்தினர் ஆய்வு செய்து, பழுதான விளக்குகளை அகற்றி விட்டு, புதிய விளக்குகளை பொருத்த வேண்டும்.- பிரகாஷ், ஓணாப்பாளையம்.

பாலத்தை 'ஸ்ட்ராங்கா' கட்டணும்பேரூர் படித்துறை அருகில், வேடப்பட்டியை இணைக்கும் சாலையின் குறுக்கே இருந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டப்படுகிறது. பணியின் இடையே இருமுறை வெள்ளத்தால், அடித்துச் செல்லப்பட்டது. இனியாவது, பாலத்தை ஸ்ட்ராங் ஆக கட்ட வேண்டும்.-சுப்ரமணியன்,

பேரூர்.

வேகத்தடையை அகற்றுங்க!பாலக்காடு ரோடு, குனியமுத்துார் அபர்ணா பஸ் ஸ்டாப் அருகே உள்ள, ஞானபுரத்தில் தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடையை அகற்றி, சீரான போக்குவரத்துக்கு உதவ வேண்டும்.- செந்தில்குமார், இடையர்பாளையம்.

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலைஅவிநாசி ரோட்டில், சாலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை, நடைபாதையை விட உயரமாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், தவறி விழும் அபாயம் உள்ளது.- பாலா, பீளமேடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X