பொது செய்தி

தமிழ்நாடு

காந்திமாநகர், சுண்டக்காமுத்துார் அரசு பள்ளிகளுக்கு விருது!

Added : பிப் 05, 2020
Share
Advertisement

கோவை:சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளி மற்றும் தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, காமராஜர் நினைவு விருது வழங்கப்பட்டது.காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிகளுக்கு, இந்த தினத்தில் காமராஜர் நினைவு விருது வழங்கப்படுகிறது.மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு வசதி, சிறந்த குடிநீர், கழிவறை வசதி, கல்வி செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, சான்றிதழுடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.இதே போல், கல்வி மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், விளையாட்டு என தனித்திறமைகளில் சிறந்த விளங்கும் மாணவர்களில், பத்தாம் வகுப்பை சேர்ந்த தலா, 15 பேர் மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் தலா 15 பேருக்கு, ஆண்டுதோறும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.நடப்பாண்டுக்கான காமராஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் ராஜாமணி தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதுக்கு தேர்வான, காந்திமாநகர் உயர்நிலைப்பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய் மற்றும் சுண்டக்காமுத்துார் மேல்நிலைப்பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறந்த மாணவருக்கான காமராஜர் விருதில், 10ம் வகுப்பை சேர்ந்த, 15 பேருக்கு தலா, 10 ஆயிரம் மற்றும் பிளஸ் 2 சேர்ந்த, 15 பேருக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''இந்த விருதுகள், அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X