பொது செய்தி

தமிழ்நாடு

இந்துஸ்தான் கல்லுாரியில் 16வது உயிரி உச்சி மாநாடு

Added : பிப் 05, 2020
Advertisement

கோவை:கோவை, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியின் உயிர் தொழில்நுட்பவியல் உயராய்வு துறையும், நுண்ணுயிரியல் துறையும் இணைந்து, கல்லுாரி வளாகத்தில் நேற்று, 16வது உயிரி உச்சி மாநாட்டை நடத்தின.வியாட்நாம் 'கேன் தோ' பல்கலை வேளாண் கல்லுாரியின் மண் அறிவியல் துறை இணை பேராசிரியர் ஞ்யான் கோய் ஞியா, 'தாவரங்களின் பாதுகாப்பில் மண்ணுயிர்களின் பயன்பாடு' குறித்து துவக்க உரை வழங்கினார்.மருத்துவ பயன்பாடுகளில் நுண்ணுயிரிகள் தொடர்பான தற்போதைய கண்டுபிடிப்புகள், சவால்கள், அதனுடன் தொடர்புடைய உயிரி எரிபொருட்கள், மருந்துகள், உயர்மதிப்பு சேர்க்கப்பட்ட உயிர்வேதியியல் போன்றவற்றில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள், முக்கிய மைல்கற்களை விரைவுபடுத்துதல், மாநாட்டின் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டன.280க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்று, ஆய்வு முடிவுகளை முன்வைத்தனர்.திருச்சி பாரதிதாசன் பல்கலை கடல் நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் மனோகரன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலாளர் பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X