தமிழ்நாடு

சொன்னது என்னாச்சு? 'ஸ்மார்ட் கார்டு' இருந்தும் அரிசி 'பெப்பே'ஒரு மாதத்தில் 16 ஆயிரம் கிலோ கடத்தல்!

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 சொன்னது என்னாச்சு? 'ஸ்மார்ட் கார்டு' இருந்தும் அரிசி 'பெப்பே'ஒரு மாதத்தில் 16 ஆயிரம் கிலோ கடத்தல்!

கோவை:ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்திய பின்பும், அரிசி கடத்தல் குறைந்தபாடில்லை. கோவை மாவட்டத்தில், கடந்த ஜனவரியில் 16 ஆயிரத்து 835 கிலோ ரேஷன் அரிசி, கேரள மாநிலத்துக்கு கடத்திச்செல்லும் வழியில், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின், பொது வினியோக திட்டத்தின் கீழ் இலவச அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.மாநிலத்தில், 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 2 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 143 கார்டுகள் உள்ளன. இதில், இலவச அரிசி ஆண்டுக்கு குறைந்தபட்சம், 3 லட்சம் மெட்ரிக் டன் வழங்கப்படுகிறது.
இந்த அரிசி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு,கடத்தப்பட்டு அங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.2019ம் ஆண்டு மட்டும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தியதாக, 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; இதில், 176 வாகனங்கள் பொது ஏலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவையில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்கள் போன்று அல்லாமல், ஒவ்வொரு மாதமும் மக்கள் வாங்குவதை கண்காணித்து, வினியோகம் கட்டுப்படுத்தப்படுகிறது.கடந்த காலங்களை ஒப்பிடுகையில், கோவையில் அரிசி கடத்தல் சற்று குறைந்துள்ளது. ஆனால், பிற மாவட்டங்களிலிருந்து கடத்தப்படும் அரிசி, கோவை வழியாக எடுத்துச்செல்வதால், பறிமுதல் அளவு அதிகம் உள்ளது.கோவையிலிருந்து பாலக்காடு செல்ல, 40 வழிகள் இருக்கின்றன; இவை அனைத்தையும் தொடர்ந்து கண்காணிப்பது இயலாது. கிடைக்கும் தகவலின் அடிப்படையில், ஆய்வு செய்து பறிமுதல் செய்கிறோம்.கடந்த மாதம் கோவையில், லாரி, கார், இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவற்றின் மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட, 16 ஆயிரத்து 835 கிலோ அரிசி , 30 பாக்கெட் பாமாயில் மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆமா... ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட் கார்டுன்னு ஒரு கார்டு அறிமுகம் செஞ்சீங் களே... அந்த கார்டு வந்திருச் சின்னா அரிசி கடத்தல் சுத்தமா 'ஸ்டாப்' ஆயிரும்னு சொன்னீங்களே... அது என்னாச்சு கலெக்டர் சார்?வண்டி கிடைக்காது தம்பி!
கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, 678 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, கடந்த ஓராண்டாக, பிடிபடும் வாகனங்கள் பொது ஏலத்துக்கு விடப்படுகிறது. இதனால், அரிசி கடத்தல் விவகாரத்தில் துணிந்து லாரி, ஆட்டோ ஓட்டுனர்கள் இறங்குவது குறைந்துள்ளது. 2019ல் பிடிபட்ட, 250 வாகனங்களில், 176 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-பிப்-202008:57:48 IST Report Abuse
கதை சொல்லி பார்த்தீர்களா நீங்க எப்படி கேட் போட்டாலும் ஈஸியா ஊழல் பண்ணுராரு... இந்த மண்ணு அப்படி பழகிருச்சி... மக்களே அவங்க அவங்க கார்டை புரோக்கர்களிடம் கொடுத்து அரிசி சர்க்கரை எல்லாவற்றையும் வாங்கி, விற்று காசை கொடு என்று வாங்கி கொள்கிறார்கள். அப்புறம் எப்படி...
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202009:29:31 IST Report Abuse
Babu வேலிக்கு ஓணான் சாட்சி, ஓநாய்க்கு நரி சாட்சி, ஆடு பத்திரமா இருக்கு. இதுதான் தமிழ்நாட்டு அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
05-பிப்-202014:45:46 IST Report Abuse
ஆப்பு ஸ்மார்ட் கார்ட் இருந்தா ஊழல் செய்ய முடியாதா? இன்னும் ஈசியா ஊழல் செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X