பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கட்டடங்களில் மது அருந்தினால் நடவடிக்கை: தண்டோரா மூலம் அறிவிப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் அரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகம், கிராம நிர்வாக அலுவலக கட்டடம், ஊராட்சி அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பலர் மது அருந்தி விட்டு, அங்கேயே பாட்டில்களை உடைத்துப் போட்டுச் செல்கின்றனர். இதனால், பொதுமக்கள் பலரும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், வி.ஏ.ஓ., உத்திரவேல் மேற்பார்வையில், ஆனாங்கூர் கிராமத்தில் தண்டோரா மூலம் அரசு கட்டடம், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்களில் மது அருந்தினால் காவல் துறை மூலம் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்பப்படும் என்ற தகவலை அறிவித்தனர்.இது மட்டுமின்றி, இதுசம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர்களை, அரசு கட்டடங்களிலும் ஒட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X