பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கான நிதியுதவி: பெயரை சரி பார்க்க அறிவுரை

Added : பிப் 05, 2020
Advertisement

கோவை:பயிர் சாகுபடி திட்டத்தில், தேவையான இடுபொருள் கொள்முதல் செய்ய, விவசாயிகளுக்கு மத்திய அரசு, ரூ.6,000 வழங்குகிறது.பதிவு செய்துள்ள விவசாயிகள், ஆதார் அட்டையில் இருப்பதுபோல், மத்திய அரசின் இணையதளத்தில் பெயரை திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில், தமிழகத்தில் விவசாயிகள், பயிர் சாகுபடி செய்வதற்காக, இடுபொருட்கள் கொள்முதல் செய்ய, நான்கு மாதத்துக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், ரூ.6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 34.41 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.2,431.59 கோடி வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள், தங்களது புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், சிட்டா ஆகியவற்றுடன், தங்களது வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே இரண்டு தவணை தொகை பெற்றவர்கள், மூன்றாவது தவணை பெறாமல் இருந்தால், தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன், அருகாமையில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களையோ அல்லது, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையோ அல்லது, இ-சேவை மையத்தையோ தொடர்பு கொண்டு சரி செய்தால், தவணை தொகை கிடைக்கும். உதவித்தொகை தொடர்ந்து கிடைக்க, ஆதார் அட்டையில் இருப்பதை போலவே, மத்திய அரசின் இணையதளத்தில் பெயர் இருக்க வேண்டும்.வித்தியாசம் இருப்பின், உடனடியாக திருத்தம் மேற்கொள்ள, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X