பொது செய்தி

தமிழ்நாடு

லட்சுமி நரசிம்மர் கும்பாபிேஷகம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

Added : பிப் 05, 2020
Advertisement

கோவை:கோவை, ஒப்பணக்கார வீதியிலுள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை, 5:00 முதல் 12:00 மணி வரை நடக்கிறது. இதையடுத்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்கடம்- காந்திபுரம் மற்றும் அவிநாசி சாலை செல்லக்கூடிய வாகனங்கள், சுங்கம் புறவழிச்சாலை, வாலாங்குளம், அரசு மருத்துவமனை சிக்னல் வழியாக செல்ல வேண்டும். உக்கடம்- காந்திபார்க், ஆர்.எஸ்.புரம்., தடாகம் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு பேரூர் பைபாஸ் சாலை, செட்டி வீதி, சலிவன் வீதி வழியாக செல்ல வேண்டும். தடாகம் சாலையிலிருந்து உக்கடம் பகுதிக்கு காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா சந்திப்பு, பேரூர் புறவழி சாலை வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் சாலை மற்றும் அவிநாசி சாலையிலிருந்து உக்கடம் பகுதிக்கு, அவிநாசி சாலை மேம்பாலம், கூட்செட் ரோடு, பெரிய கடை வீதி, வின்சென்ட் ரோடு வழியாக செல்ல வேண்டும். டவுன்ஹால் வழியாக உக்கடம் நோக்கி செல்ல, என்.எச்., ரோடு ராஜா தியேட்டர் சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி, வைசியாள் வீதி வழியாக சென்று, பேரூர் ரோடு,செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். பொதுமக்கள், தங்கள் வாகனங்களை, உக்கடம் புதிய மேம்பாலம் கீழ் பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X