மாற்று வழி அறிவிப்பு இல்லை: வாகன ஓட்டிகள் அலைக்கழிப்பு

Added : பிப் 05, 2020
Advertisement
 மாற்று வழி அறிவிப்பு இல்லை: வாகன ஓட்டிகள் அலைக்கழிப்பு

பல்லடம்:பல்லடம் அருகே, மாற்று வழிக்கான அறிவிப்பு இன்றி, வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.பல்லடத்தை அடுத்த அருள்புரம்- -கணபதிபாளையம் செல்லும் வழியில், பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதற்காக, மாற்று வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்பு ஏதுமில்லாததால், வாகன ஓட்டிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:கணபதிபாளையம் செல்லும் ரோட்டை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். பாச்சாங்காட்டுப்பாளையம் பகுதியில், பாலம் கட்டுமான பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்று வழித்தடம் குறித்து, சரியான அறிவிப்பு வைக்கப்படவில்லை.ஒரு கி. மீ.,க்கு முன்பாகவே, மாற்று வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு, சிறிய பலகையில், மின்கம்பத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. அது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யார் கண்ணிலும் படுவதில்லை. அதனால், பாலம் கட்டப்படும் இடம் வரை சென்று, மீண்டும் திரும்பி வரும் நிலை ஏற்படுகிறது. மாற்று வழி ஏற்படுத்தியுள்ளது குறித்து, அந்த இடத்திலேயே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X