சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணி கட்சியினர் திடீர் ஊர்வலம் செஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Added : பிப் 05, 2020
Advertisement
 தி.மு.க., கூட்டணி கட்சியினர் திடீர் ஊர்வலம் செஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்

செஞ்சி:செஞ்சியில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் அனுமதியின்றி திடீரென ஊர்வலம் நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செஞ்சி கூட்டு ரோட்டில் நேற்று தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் குடிஉரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக போலீசார் விழுப்புரம் சாலையில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இடம் ஒதுக்கியிருந்தனர்.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், காங்., சொத்து மீட்பு குழு உறுப்பினர் ரங்கபூபதி, ம.தி.மு.க., மாநில துணை பொதுச் செயலர் மணி, வி.சி., மாவட்ட செயலர் சேரன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திரண்டினர்.நிகழ்ச்சி துவங்கியதும் பேசிய மஸ்தான் எம்.எல்.ஏ., நடந்து சென்று கடைகளில் கையெழுத்து வாங்குவது என அறிவித்தார். இதையடுத்து அனைவரும் ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர்.
வழியில் காந்தி பஜாரில் இருந்த பூக்கடை, பழக்கடை என சாலை ஓரம் இருந்த கடைகளில் கையெழுத்து வாங்கினர்.அப்போது மற்றவர்கள் சாலையில் வழியை மறித்து நின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. கையெழுத்து இயக்கம் என்பதால் குறைந்த அளவு போலீசாரே பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.தி.மு.க., கூட்டணி கட்சியினர் அறிவிப்பின்றி நடத்திய இந்த திடீர் ஊர்வலத்தால் செஞ்சி கூட்ரோட்டில் இருந்து பஸ் நிலையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X