மாவட்ட தடகள விளையாட்டு: அரசுப்பள்ளி மாணவர் அபாரம்

Added : பிப் 05, 2020
Advertisement

அவிநாசி:மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றியை அள்ளினர்.திருப்பூர் மாவட்ட அளவில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டன. இதில் ,17 வயது மாணவியர் கால்பந்து போட்டியில், மாவட்ட அளவில் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி, முதலிடம் பெற்றது.தடகள போட்டியில், 17 வயது பிரிவில், மாணவி சந்தியா, 1,500 மீ., ஓட்டத்தில் முதலிடம், ஷர்மிதா, ஈட்டி எறிதலில் முதலிடம், பிரசில்லா, குண்டெறிதல் மற்றும் தட்டெறிதலில், மூன்றாமிடம், மாணவி பகவதி, தட்டெறிதலில் முதலிடம், தேவராஜ், குண்டெறிதலில் மூன்றாமிடம் மற்றும் 1, 600 மீ., தொடர் ஓட்டத்தில், இரண்டாமிடம் பெற்றார்.பத்தொன்பது வயது பிரிவில், மாணவர் நவீன்குமார், குண்டெறிதல், மற்றும் தட்டெறிதலில் இரண்டாமிடம், நீளம் தாண்டுதலில், மூன்றாமிடம் பெற்றார். மாணவி காயத்திரி, உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம் பெற்றார்.மேலும், 1,600 மீ., தொடர் ஓட்டத்தில், இப்பள்ளி அணியினர் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் ஆகியோரை, தலைமையாசிரியர் குமரேசன், உதவி தலைமையாசிரியர் மணிகண்டன் மற்றும் இளங்கோ உட்பட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி வளர்ச்சி குழுவினர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X