பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பயிற்சி பெறுவது எளிது! நகர வாழ்வாதார மையம் துவக்கம்

Added : பிப் 05, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், குறைந்த கட்டணத்தில் தொழிற்பயிற்சி பெறும் நகர வாழ்வாதார மையம் தொடங்கப்பட்டுள்ளது.தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் சார்பில் மத்திய, அரசு மாநில அரசுகளுடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள நகர்புறங்களில் நகர வாழ்வாதார மையங்களை துவக்கி வருகிறது.இச்சூழலில், திருப்பூர், அவிநாசி ரோடு, மாநகராட்சி வணிக வளாகத்தில், நகர வாழ்வாதார மையத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், திட்ட இயக்குநர் கோமகன், உதவி திட்ட அலுவலர்கள் தாமஸ்ராஜன், ராதாகிருஷ்ணன், சுதா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து, மகளிர் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், தொழிற்பயிற்சி கிடைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, திருப்பூர் நகர மக்கள் பிளம்பிங், எலக்ட்ரிகல், கார்பென்டர், வீட்டு பராமரிப்பு, அழகுப்படுத்துதல், வாட்ச்மேன், ஓட்டுனர்கள் வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆதார் அடையாள அட்டை பெறுதல் போன்ற சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.இதற்கு, மத்திய, மாநில அரசின் நிதி உதவி பெறப்படும். தொழிற்பயிற்சி பெற விரும்புபவர்கள், இம்மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், தொழிற்பயிற்சி பயின்றவர்கள் இம்மையத்தில் தங்களது பெயர்களை குறைந்த கட்டணத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X