சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறித்த சிறுவர்கள் சிறையில் அடைப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

பல்லடம்:பல்லடம் அருகே, செயின் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவர், சிறையில் அடைக்கப்பட்டனர்.பல்லடத்தில் அடுத்த கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் தங்கவேல், 46; பனியன் கம்பெனி ஊழியர். மனைவி புஷ்பவதி 42. கடந்த, 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு, புஷ்பவதி குங்குமபாளையம் செல்லும் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த இரண்டு பேர், புஷ்பவதி அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.புகாரின் பேரில், அப்பகுதியில் கிடைத்த 'சிசிடிவி' பதிவின் அடிப்படையில், போலீசார் விசாரித்தனர். அதில், செயின் பறிப்பில் ஈடுபட்ட, மகாராஷ்டிரா, தானே மாவட்டத்தை சேர்ந்த சாஜி ஜாபர், 19, மற்றும் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி சேர்ந்த, 15 வயது சிறுவன் என, இருவரை போலீசார் கைது செய்தனர்.மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட, சாஜி ஜாபர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X