பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் கட்சிகள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் கட்சிகள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

திருப்பூர்:திருப்பூர் வடக்கு தாலுகாவில், அரசு நிலத்தை ஆக்கிரமிக்க, கட்சியினர் கொடியை கட்டியுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் வடக்கு தாலுகா, நெருப்பெரிச்சல் கிராமத்தில், பாண்டியன் நகரில் இருந்து அண்ணா நகர் செல்லும் வழியில், நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரோட்டின் இடதுபுறமாக, அரசுக்கு சொந்தமான நிலத்தை, பல்வேறு கட்சியினர், கட்சிக்கொடியை கட்டி, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அரசு நிலத்தை மீட்டெடுக்க, வருவாய்த்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் களமிறங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அப்பகுதியினர் கூறியதாவது:மயான நிலம் பயன்பாடின்றி இருப்பதால், சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். தற் போது, அ.தி.மு.க., -அ.ம.மு.க., - பா.ஜ, உட்பட கட்சிகள் இணைந்து, நிலத்தை ஆக்கிரமித்துள்ளன.
இந்த இடத்தை பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்தனர்.நெடுஞ்சாலை ரோட்டுக்கு அருகே உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். பொது நடைபாதை பயன்பாட்டுக்காக சுத்தம் செய்து வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தாசில்தார் ஜெயக்குமார் கூறுகையில், ''இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X