தமிழ்நாடு

ஏமாற்றம் காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள்...: படகு போக்குவரத்து துவங்க தாமதம்

Added : பிப் 05, 2020
Advertisement

திருவாடானை:சமீபத்தில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து, காரங்காட்டில் படகு போக்குவரத்து துவங்குவதில் தாமதம் ஆவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.

தொண்டி அருகே காரங்காடு கடலில் சதுப்பு நிலக் காடுகள் அமைந்திருப்பதால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் ஏராளமானசுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர்.ஜன.16ல் ஒரு படகில் 17 பேர் சென்ற போதுபடகு கவிழ்ந்ததில் அஜித் என்ற ஆறு வயது சிறுவன் மூச்சு திணறி இறந்தான்.

இச்சம்பவத்தால் அங்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டி மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து படகு ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை கைது செய்துபடகை பறிமுதல் செய்தனர். சேதமான படகை சரி செய்து மீண்டும் கடலில் செல்லவனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால்படகை சரி செய்ய முடியவில்லை.

இதனால், 20 நாட்களுக்கு மேல் ஆகியும் படகு போக்குவரத்து துவங்கவில்லை. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மாற்று படகு விடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் படகு போக்குவரத்து துவங்கும். படகில் செல்பவர்கள்கண்டிப்பாக லைப் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X