இயற்கை சார்ந்த திறனாய்வு: பிப்., 9ல் நடக்குது போட்டி

Added : பிப் 05, 2020
Advertisement

திருப்பூர்:உலக வனநாள் முன்னிட்டு, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான இயற்கை சார்ந்த திறனாய்வு போட்டியை வரும் 9ம் தேதி நடத்துகிறது.ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இப்போட்டியில் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். பேச்சுப்போட்டிக்கு, ஒரு பள்ளியில் இருந்து, 6 - 8ம் வகுப்பில் ஒருவர், 9 முதல் பிளஸ் 2 வகுப்பில் ஒருவர் என, இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிக்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.தேவையான பேப்பர் மட்டுமே வழங்கப்படும். போட்டிக்கு தேவையான பிற உபகரணங்களை பங்கேற்பாளர்களே எடுத்து வர வேண்டும். பேச்சு, கட்டுரைப்போட்டி தமிழ்மொழியில் மட்டுமே நடக்கும். வெற்றி பெறுவோருக்கு பரிசுகள், சான்றிழ்கள் வழங்கப்படும். எனவே பள்ளி அளவில் தகுதியான இரண்டு நபர்களை மட்டும் அனுப்பி வைக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X