பொது செய்தி

தமிழ்நாடு

'ஊக்கம் கிடைக்கும்; உற்சாகம் பிறக்கும்'

Added : பிப் 05, 2020
Share
Advertisement

ஏற்றம் வந்த போது தாவிக்குதித்து கொண்டாடவும் இல்லை... எதிர்பாராத சறுக்கல் வந்த போதும் சலிக்காமல் போராடவும், திருப்பூர் தொழில்துறையினர் மறப்பதில்லை. ஓய்வறியா உழைப்பை மட்டுமே நம்பியுள்ள, பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் வெற்றிக்கான தாரக மந்திரமும் இதுதான்.திருப்பூர், பின்னலாடை தொழிலுக்கு, தற்போதைய சூழலில், அரசின் ஆதரவும், உதவியும் அவசியம். கட்டமைத்துள்ள அமைப்புகள் வாயிலாக, அரசின் கவனத்துக்கு கொண்டு, தேவையான சலுகையை பெறுவதிலும், பாராட்டத்தக்க வெற்றி கிட்டியுள்ளது.தொழில்துறையினர் சோர்ந்திருந்த நேரத்தில், ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' என்ற ஊக்குவிப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஐந்தாவது முறையாக, 'வெற்றிப்பாதையில் திருப்பூர்-2020' கருத்தரங்கு, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில், வரும் 8ம் தேதி நடக்கிறது.தொழில்துறையினருக்கு ஆதரவாக இருந்து, ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும், 'தினமலர்' நாளிதழும், இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறது. தற்போதைய காலசூழலுக்கு ஏற்ப, தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும் தலைப்புகளில், வல்லுனர்கள் பேசுகின்றனர்.டில்லியில் உள்ள ராஜேஸ் பேடா என்ற மூத்த வல்லுனர், 22 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு, ஆலோசகராக இருக்கிறார். இவரது அனுபவத்தை, திருப்பூர் தொழில்துறையினர் இடையே பகிர்ந்து கொண்டு, அரிய ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.உலகளாவிய உற்பத்தி திறனில், திருப்பூர் 40 சதவீதம் குறைவாக இருக்கிறது. உற்பத்தி திறனை மேம்படுத்த, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இக்கருத்தரங்கில் விளக்கப்படும். சேதாரமில்லாமல், ஆடை உற்பத்தி செய்வது, திருப்பூரின் 'பிராண்டட்' ஆடையை, சரியான இடத்தில் சந்தைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.ஒப்பந்தத்தை முடித்து கொடுக்க, காலக்கெடு நிர்ணயம் செய்து, ஆர்டரை குறித்த நேரத்தில் முடித்து கொடுக்க வேண்டும். மற்ற நாடுகளை விட, இந்தியா முதலிடத்தில் இருக்க உதவியாக இருக்கும். மனிதவள மேலாண்மையில், கூடுதல் திறன் வளர்க்க வேண்டும்.திறமையான அதிகாரிகள், அலுவலரை, பயிற்சி வாயிலாக, சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வது. டெய்லர்களுக்கு, திறன் ஊக்குவிப்பு அவசியம். உற்பத்தி திறன் மேம்பாடு, தொடர் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்து விளக்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X