போலீஸ் மரியாதையுடன் எஸ்.ஐ., உடல் அடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் மரியாதையுடன் எஸ்.ஐ., உடல் அடக்கம்

Added : பிப் 05, 2020
Share

பல்லடம்:பல்லடம் அருகே, விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ., யோக முரளியின் உடல், போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.பல்லடம் உட்கோட்டம், மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் யோக முரளி, 52. நேற்று முன்தினம், மங்கலம் ரோட்டில் பைக்கில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது உடலுக்கு, எஸ்.பி., திஷா மிட்டல், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.கூடுதல் டி.எஸ்.பி., உட்பட, உட்கோட்ட போலீசார் பலரும் பங்கேற்க, 21 குண்டுகள் முழங்க, கொடுவாய் மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த எஸ்.ஐ., உடலுக்கு, அரசியல் கட்சியினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X