தமிழ்நாடு

கிராமங்களில் காய்ச்சல் கட்டுக்குள் வராததற்கு...காரணம் என்ன? 'குளோரினேஷனில்' ஏற்பட்ட குளறுபடி உறுதி

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020
Advertisement
கிராமங்களில் காய்ச்சல் கட்டுக்குள் வராததற்கு...காரணம் என்ன?  'குளோரினேஷனில்' ஏற்பட்ட குளறுபடி உறுதி

அவிநாசி;கிராம ஊராட்சிகளில், டெங்கு மற்றும் காய்ச்சல் கட்டுக்குள் வராததற்கு, சுத்திகரிக்கப்படாத தண்ணீர் வினியோகிக்கப்படுவது தான் முக்கிய காரணம், என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கிராம ஊராட்சிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. பொது சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கிராமப்புறங்களில் முகாமிட்டு, முழு சுகாதார பணி மேற்கொண்டு வந்தாலும், காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை.அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கிராம ஊராட்சிகளில் மக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீர் உரிய குளோரினேஷன் செய்யப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுபொது சுகாதாரப் பிரிவினர் கூறியதாவது:மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டத்தில் இருந்து, அவிநாசி மற்றும் திருப்பூர் வழியோர கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில், தண்ணீரை குளோரினேஷன் செய்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர் விநியோகித்தாலும், பல கி.மீ., தூரம் பயணித்து, குழாயில் வந்து சேரும் தண்ணீரில் குளோரின் அளவு போதுமானதாக இருப்பதில்லை.
கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து, வினியோகிக்கப்படும் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் அளவை உபகரணம் மூலம் ஆய்வு செய்ததில், இந்த உண்மை தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்இந்த விவரம் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சமீபத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் உள்ள பம்ப் ஆபரேட்டர்கள், குடி நீர் தேக்கத் தொட்டியில் குளோரினேசன் செய்யும் பணியில்கவனம் செலுத்த வேண்டும், என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஆயிரம் லி., குடிநீருக்கு, 4 கிராம் என்ற அளவில் குளோரினேஷன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, ஊராட்சி செயலாளர்கள் கூறியதாவது:கிராம ஊராட்சிகளில் பம்ப் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.
தண்ணீரை அந்தந்த பகுதிகளுக்கு திறந்துவிடும் பணியை செய்வதற்கே நேரம் போதியளவில் இருப்பதில்லை. இச்சூழலில், குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குளோரினேசன் செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது கேள்விக்குறிதான்.ஆட்கள் பற்றாக்குறையால் இரு மாதத்திற்கு ஒரு முறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது. எனவே, ஊராட்சிகளில் போதியளவு பணியாளர்களை நியமித்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உப்புத் தண்ணீரிலும் குளோரின்இதுநாள் வரை நல்ல தண்ணீரில் மட்டுமே குளோரினேஷன் செய்யும் பணியை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து வந்தனர். வரும் நாட்களில், ஊராட்சிகளில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் வினியோகிக்கப்படும் உப்புத் தண்ணீரிலும் குளோரின் கலக்க வேண்டுமென பொது சுகாதார பிரிவினர், ஊராட்சி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X