பொது செய்தி

தமிழ்நாடு

மீன் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 மீன் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்ட மாணவர்கள்

ராமேஸ்வரம்:ஆண்டு விழாவையொட்டி ராமேஸ்வரம் அருகே மண்டபம் மீன் ஆராய்ச்சி நிலைய மியூசியத்தை ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

கடந்த 1947ல் மண்டபத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்பட்டது. இதன் 73வது ஆண்டு விழாவையொட்டி, பிப்.3ல் கடல் மீன்கள் மியூசியம், மீன்கள் வளரும் கூடம், அலங்கார மீன்கள் வளர்ப்பு கூடத்தை 2000 பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இலவசமாக கண்டு ரசித்தனர்.
விழாவில், மண்டபம் கேந்திர வித்யாலயா, அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர்.இவர்களுக்கு எதிர் காலத்தில் எந்த தொழில் நுட்ப கல்வியை தேர்வு செய்வது, என மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை கமாண்டர் வெங்கடேசன் மற்றும் மீன்துறை சார்ந்த படிப்பு, பயன்கள் குறித்து செயல் முறை விளக்கமாக படத்துடன் விஞ்ஞானிகள் விளக்கினர்.

ஏற்பாடுகளை மண்டபம் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயகுமார், விஞ்ஞானிகள் ஜான்சன், சங்கர் உட்பட பலர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X