பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் 1ல் டி.எஸ்.பி.,யான பெண்ணுக்கு பாராட்டு

Added : பிப் 05, 2020
Advertisement

திருவாடானை:திருவாடானை அருகே திருவடிமதியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.இவரது மகள் ராஜ பிருந்தா 26. இவர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று சென்னை உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கை துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.

தற்போது குரூப் 1 தேர்வில் டி.எஸ்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார். இவர் படித்ததிருவாடானை ராஜன் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. திருவாடானைடி.எஸ்.பி.,புகழேந்தி கணேஷ் தலைமை வகித்தார். பெற்றோர் சங்க தலைவர் வீரப்பன், வக்கீல் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.டி.எஸ்.பி.,யான ராஜபிருந்தாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் அருள் நிர்மலா நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X