பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி., ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்

Added : பிப் 05, 2020
Advertisement
 எல்.ஐ.சி., ஊழியர்கள்  வெளிநடப்பு போராட்டம்

ராமநாதபுரம்:மத்திய அரசு எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து எல்.ஐ.சி., ஊழியர்கள் 1 மணி நேரம் வெளி நடப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பட்ஜெட் தொடரில் எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. இதனை எதிர்த்து ராமநாதபுரம் எல்.ஐ.சி., கிளையில் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் சலீம் பாட்சா தலைமை வகித்தார். முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் சுரேஷ், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கிளை செயலர் முத்துப்பாண்டி கூறுகையில், லாபத்தில் இயங்குவதும், சிறப்பான சேவைக்காக பல விருதுகளை பெற்றுள்ள எல்.ஐ.சி., யின் பங்குகளை தனியாருக்கு விற்பதை ஊழியர்கள் மட்டுமல்ல 40 கோடி பாலிசிதாரர்களும் எதிரப்பார்கள், என்றார். பொருளாளர் சேசு நன்றி கூறினார்.

* அகில இந்திய எல்.ஐ.சி., முகவர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். கோட்ட துணை செயலர் கணபதி முன்னிலை வகித்தார். கிளை செயலர் கர்ணன் வரவேற்றார். முகவர்களின் வணிகத்தை பாதிக்கும் எல்.ஐ.சி., ஆன்லைன் நேரடி சந்தைப்படுத்துதலை அமல்படுத்த கூடாது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X