பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 05, 2020
Advertisement
 எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை:எல்.ஐ.சி.,யில் உள்ள அரசின் 5 சதவீத பங்குகளை விற்று நிதி திரட்ட இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எல்.ஐ.சி., ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி., அலுவலகங்களில் ஒரு மணி நேரம் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை கிளை அலுவலகத்தில் மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நேரத்தில் ஊழியர்கள் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகத்துக்கு வெளியே ஊழியர்கள் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி., ஊழியர் சங்க தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்லப்பாண்டி வரவேற்றார். முதல்நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி வைரமுத்து, லிக்காய் முகவர் சங்க நிர்வாகி ராசு, லியாபி முகவர் சங்க தலைவர் செல்லப்பாண்டி, பாபு உள்ளிட்ட ஊழியர்கள், முகவர்கள் பலர் பங்கேற்றனர். செந்தில்பாண்டி நன்றி கூறினார்.

* திருப்புத்துார் எல்.ஐ.சி..கிளை அலுவலகம் முன் எல்.ஐ.சி.பங்குகளை பட்டியலிடும் முடிவைத் திரும்ப பெற வலியுறுத்தி பணியாளர்கள் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சங்கரேஸ்வரன் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் பரணி முருகன். முகவர் சங்கத்தின் சார்பில் ராமலிங்கம் மற்றும் ராஜா மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் கிளைச்செயலாளர் சசிக்குமார் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் முதல் நிலை அதிகாரிகள் சங்கம்.வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் முகவர்கள் சங்கம் நலச் சங்கம் மற்றும் ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.மதுரை கோட்ட இணைச்செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X