பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டார் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு

Added : பிப் 05, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரையில் 16 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் நாட்டார் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை வருவாய்துறையினரோடு இணைந்து அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் இருந்து ராஜகம்பீரம், கிளங்காட்டூர், வளநாடு 16 கிராம மக்கள் பயன்பெற நாட்டார் கால்வாய் திட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு செயல்படுத்தப் பட்டது. இந்த கால்வாயில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு மற்றும் சீரமைப்பு இல்லாததால் கடந்த முறை வைகை ஆற்றில் 2 முறை தண்ணீர் வந்தும் இந்த கால்வாயில் தண்ணீர் வராததினால் மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் 100 அடி ஆழத்தில் இருந்து 400 அடிக்கும் கீழே போய்விட்டது.

மேலும் தண்ணீரின் சுவையும் மாறி உவர்ப்புத்தன்மையுடன் இருப்பதால் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுப்பணித்துறையிடம் மனு கொடுத்தனர்.

இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் கிளாங்காட்டூர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்போடு விரைவில் அகற்ற உள்ளதாக விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறையினர் தகவல் அளித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X