வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : பிப் 05, 2020
Advertisement
 வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்புவனம்:வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னம், அரசு முத்திரை, அரசு பணி என எழுதி வலம் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 152 கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் பலரும் டூவீலர்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். வாகனங்களில் பலரும் தங்கள் இஷ்டத்திற்கு அரசு சின்னங்களையும், முத்திரைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். அரசு சின்னங்கள் இருப்பதால் போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை சோதனை செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

இதனால் வாகனங்களில் இஷ்டத்திற்கு பெயர்களை எழுதும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உறவினர்கள் காவல்துறையில் பணியாற்றினால் டூவீலர்களில் போலீஸ் என எழுதி வலம் வருகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் தங்கள் வாகனங்களில் அரசு பணி என எழுதி வலம் வருவதால் வாகனச் சோதனையின் போது போலீசாரும் மற்றவர்களும் வாகனங்களை சோதனை செய்யாமல் விட்டு விடுகின்றனர்.

அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களும் அரசு வாகனம் என எழுதி வலம் வருகின்றனர். சரக்கு வாகனங்களில் அரசு பணிக்கு பயன்படுத்தி முடிந்த பின்னரும் இன்னமும் அரசு பணிக்கு என எழுதிய ஸ்டிக்கர்களை கிழிக்காமல் வாகனங்கள் வலம் வருகின்றன. எனவே போக்குவரத்து போலீசார் விதிகளை மீறி வாகனங்களில் எழுதி வலம் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X