பொது செய்தி

தமிழ்நாடு

5,8 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து ஆசிரியர் கூட்டணி வரவேற்பு

Added : பிப் 05, 2020
Advertisement

சிவகங்கை:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்ததாவது:

ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்திலும், 8 ம் வகுப்பு வரை தேர்ச்சி என்பது ஜெ., ஆட்சிக்காலத்திலும் கொண்டு வரப்பட்டவை ஆகும்.பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்தேர்வால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதுடன் இடை நிற்றலும் அதிகரிக்கும்.

இதனால் மாநிலத்தின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும். அதனாலேயே கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது இந்த பொதுத்தேர்வை அரசு ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X