பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் செலவு எவ்வளவு? கணக்கு ஒப்படைக்காமல் அலட்சியம்

Added : பிப் 05, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், 30 சதவீதம் பேர் தேர்தல் செலவு ஒப்படைக்காமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த, டிச., 27ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை ஜன., 2ம் தேதி நடத்தி, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளர்கள் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய, தேர்தல் ஆணையத்தால், உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர், 1.7 லட்சம் ரூபாய்; ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர், 85 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி தலைவர் வேட்பாளர், 34 ஆயிரம் ரூபாய்; ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர், ஒன்பதாயிரம் ரூபாய்க்குள் மட்டுமே தேர்தலுக்காக செலவளிக்க வேண்டும்.செலவளிக்கப்பட்ட கணக்கை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு ஒப்படைக்க கடந்த மாதம், 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.கெடு முடிந்தும், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களில், 70 சதவீதத்துக்கும் குறைவானவர்களே செலவு கணக்கு ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தேதி முடிந்தும் கணக்கு காட்டவில்லை.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கணக்கு காட்டி விட்டனர். தோல்வியடைந்தவர்களின் பெரும்பாலானவர்கள் கணக்கு ஒப்படைக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.தேர்தல் செலவு கணக்கு காட்டாவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், அடுத்த உள்ளாட்சி தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு பிறகே வரும் என்பதால், விதிகள் தங்களை பாதிக்காது என்ற நம்பிக்கையில் கணக்கு ஒப்படைக்காமல் உள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X