பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரவு! மோட்டார் வாகன வழக்கு பதிய போலீசாருக்கு...தவறும்பட்சத்தில் நடவடிக்கை என எச்சரிக்கை

Added : பிப் 05, 2020
Advertisement


விழுப்புரம் சப் டிவிஷனில் மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு 'டார்கெட்' கொடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்துள்ள வாகன எண்ணிக்கையால், நாளுக்கு நாள் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க மோட்டார் வாகன விதிமுறைகளில் பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணியாமல் செல்பவர்கள் மற்றும் கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்பவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர்.
இதேபோன்று, ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் டிரைவிங், சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்செல்வது, சிவப்பு விளக்குளை மீறிச் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.அதன்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீசார் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இதனால், போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், விழுப்புரம் போலீஸ் சப் டிவிஷனில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தினமும் மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்ய 'டார்கெட்' நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ெஹல்மெட், சீட் பெல்ட் தலைப்புகளில் விழுப்புரம் டவுன் மற்றும் மேற்கு, தாலுகா, வளவனுார் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா 75 வழக்குகள், கண்டமங்கலம், விழுப்புரம் டிராபிக், விக்கிரவாண்டி டிராபிக் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா 100 வழக்குகள், விக்கிரவாண்டி, அரகண்டநல்லுார், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா 80 வழக்குகள் மற்றும் காணை, பெரியதச்சூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா 50 வழக்குகள் என மொத்தம் 940 வழக்குகள் பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு உள்ளிட்டவைகளுக்கு விழுப்புரம் டவுன், மேற்கு, தாலுகா, வளவனுார், கண்டமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா 25 வழக்குகள், விக்கிரவாண்டி, அரகண்டநல்லுார், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தலா 20 வழக்குகள், விழுப்புரம், விக்கிரவாண்டி டிராபிக் போலீசிற்கு தலா 30 வழக்குகள், காணை, பெரியதச்சூர் போலீஸ் நிலையங்களுக்கு தலா 10 வழக்குகள் என 265 வழக்குகள் பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக, விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், விழுப்புரம் சப் டிவிஷனில் உள்ள போலீஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மோட்டார் வாகன வழக்குகளை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும்.தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த உத்தரவு போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X