பொது செய்தி

தமிழ்நாடு

மாசாணியம்மன் கோவில் திருவிழா: மயான பூஜை பாதுகாப்பு ஏற்பாடு

Added : பிப் 05, 2020
Advertisement
 மாசாணியம்மன் கோவில் திருவிழா: மயான பூஜை பாதுகாப்பு ஏற்பாடு

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் திருவிழாவின் ஒருபகுதியான, மயான பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 6ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடக்கிறது.தொடர்ந்து, பிப்., 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில், மயான பூஜைக்காக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.ஆழியாறு ஆற்றுப்படுகையில், மயான பூஜை நடக்கும் இடத்தில், 'பேரி கார்டுகள்', மரத்தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. பேரூராட்சியினர், பூஜை நடக்குமிடத்துக்கு செல்லும் பாதையில் புதர், குப்பை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் கூறுகையில், ''மயான பூஜைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, வி.ஆர்.டி., பெண்கள் அரசுப்பள்ளியில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படும். அரசு பஸ்கள் நிறுத்த, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 'பார்க்கிங்' அமைக்கப்படும். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பக்தர்களை கண்காணித்து பாதுகாப்பு வழங்க, 30 கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளோம்.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X