பொது செய்தி

தமிழ்நாடு

மீன்கரை ரோடு விரிவாக்க பணி ஜரூர்: முதற்கட்டமாக, ரூ.9.19 கோடி ஒதுக்கீடு

Added : பிப் 05, 2020
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் இருந்து, கேரளாவுக்கு காய்கறிகள், மாடுகள், மளிகை பொருட்கள், கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், தினமும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கொச்சின், கர்நாடகா பகுதிகளுக்கு அதிகளவில் கனரக சரக்கு வாகனங்கள் செல்கின்றன.இதுதவிர, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருப்போர், பொருட்களை கொண்டு செல்ல பொள்ளாச்சி - மீன்கரை ரோடு வழியாக கேரளா சென்று வருகிறது.பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் வரையில், 20 கி.மீ., தொலைவுக்கு, இரண்டு வழிச்சாலை உள்ளது. போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த ரோட்டில், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. வாகன விபத்துக்களை தடுக்க, நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை விரிவுபடுத்த திட்டமிட்டனர்.இதையடுத்து, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில், பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆனைமலை நெடுஞ்சாலைத்துறையினர், 9.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோடு விரிவாக்க பணியை செயல்படுத்தி வருகின்றனர்.ரோடு விரிவுபடுத்தும் பணி முழுமையாக நடந்து முடிந்தால், போக்குவரத்து பாதிப்பது மற்றும் விபத்துக்கள் நடப்பது குறைய வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கவுசல்யா கூறியதாவது:பல்லடம் பகுதியில் இருந்து, மீனாட்சிபுரம் வரையில் சுமார், நுாறு கி.மீ., தொலைவுக்கு, ரோடு விரிவுபடுத்தப்படுகிறது. ஆனைமலை உட்கோட்டத்துக்கு, மீன்கரை ரோட்டை விரிவுபடுத்த முதற்கட்டமாக, 9.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.நஞ்சேகவுண்டன்புதுாரில் இருந்து சுப்பேகவுண்டன்புதுார் பிரிவு வரையில், 5.6 கி.மீ., தொலைவுக்கு, விரிவாக்க பணி நடக்கிறது. ஏழு மீட்டர் அகலத்தில் இருக்கும் ரோடு, 10.5 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. இப்பணி முடிந்ததும், மீண்டும் நிதி ஒதுக்கீடு பெற்று, அடுத்த கட்ட பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X