பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி கமிட்டி மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி பொன்முடி எம்.எல்.ஏ., முன்னிலையில் கமிட்டி செயலர் ஆறுமுகராஜன், மேலாளர் சரவணன், தாசில்தார் ஜெயலட்சுமி, வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் மற்றும் மூட்டை துாக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கமிட்டி செயல்படத் தொடங்கியது.இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை கமிட்டி வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த பின் கமிட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 3,000 ரூபாய் வரை உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள வியாபாரிகள் உடனடியாக பணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளியூர் வியாபாரிகளும் ஏலத்தில் பங்குபெறச் செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.இ-நாம் திட்டத்தின் மூலம் உடனடியாக விவசாயிகளுக்கு பணம் சென்று சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு பாதுகாப்பு தேவையெனில் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்கலாம் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், தவறு நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X