சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : பிப் 05, 2020
Advertisement

வீடு புகுந்து திருட்டு

சிவகங்கை: சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சங்கரி 26. இவரது வீட்டின் கதவை உடைத்த நபர்கள் வீட்டிலிருந்த வெள்ளிக்கொலுசு, தங்கம் உள்ளிட்ட 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் சிவகங்கை போலீஸ் எஸ்.ஐ., கலைச்செல்வன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

கொள்ளை வழக்கு: 4 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கையில் சாலைகளில் தனியாக செல்பவர்கள், பேருந்துக்காக காத்திருப்பவர்களை கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தது. சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சப் இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், அன்சாரி உசேன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், பாண்டியராஜன், போலீசார் அடங்கிய தனிப்படையினர் , கொள்ளை தொடர்பாக கீழக்குளம் சண்முகநாதன் 24, வைரவன்பட்டி ரஞ்சித்குமார் 24, கோவானுார் ஆனந்த் 24, மதுரை மாவட்டம் பெருங்குடி திருமுருகன் 24 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் பொருட்களை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X